“லேப்டாப்பில் குவித்து வைத்த ஆபாச படங்கள்“ : இளம்பெண்களை பொறி வைத்து பிடித்த இளம் பொறியாளர் கைது!!

21 November 2020, 10:38 am
Instagram Idiot - Updatenews360
Quick Share

சென்னை : இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணை காதல் வலையில் விழ வைத்து பல பெண்களின் ஆபாச படங்களை காட்டி மிரட்டிய இளம் பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள முத்தமிழ் நகரில் வசித்து வரும் அருண் கிறிஸ்டோபர் என்ற 24 வயது இளைஞர் மின் வாரியத்தில் தற்காலிக பொறியாளராக பணியாற்றி வரகிறார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தார்,. இரண்டு மாதங்கள் அந்த பெண்ணிடம் காதல் வலையை வீசி தன்வசம் இழுத்தார். மேலும் அந்த பெண்ணிடம் நிர்வாண படங்களை அனுப்ப சொல்லி ரசித்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் தோழிகளை தன் வசம் இழுக்க நினைத்த அருண், பெண்ணிடம் சாமார்த்தியமாக பேசி இன்ஸ்டா ஐடி மற்றும் பாஸ்வேர்டை வாங்கி, அவருடை தோழிகள் யார் என லிஸ்டை எடுத்து பெண்ணை வளைத்தது போன்றே அவரது தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

எப்ப பார்த்தாலும் ஆபாச மெசேஜ்களை வருவதை அறிந்த தோழிகள், தங்களது தந்தையிடம் கூறியுள்ளனர், இதையடுத்த தோழிகளின் தந்தைகளில் ஒருவர் இது குறித்து அருணிடம் கேட்டபோது வாக்குவாதம் முற்றி தகராறானது.

மேலும் இதுபற்றி புகார் கூறினால் மகள்களின் நிர்வாண போட்டோக்களை இணையத்தில் கசிய விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, இது குறித்து துணை ஆணையரிடம் புகார் கொடுத்தார்.

துணை ஆணையர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் வாலிபரின் லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களும் குவிந்துள்ளது. இதையடுத்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்கள் நல்லதை விட தீய செயல்களுக்கு அதிக காரணியாக உள்ளது, பெண்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், உதாசினால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் தக்க சான்றாக அமைந்துள்ளது.

Views: - 0

0

0