வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தபால் ஊழியர் உயிரோடு எரிந்து பலி : மனைவி மற்றும் மகன்கள் கவலைக்கிடம்!!

17 November 2020, 4:44 pm
Post Officer Dead- Updatenews360
Quick Share

திருப்பூர் : உடுமலையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தபால் ஊழியர் உயிரோடு எரிந்த நிலையில் மனைவி மற்றும் மகன்களை போலீசார் ஆபத்தான நிலைமையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜன் (வயது 58). இவர் புங்கமுத்தூர் பகுதியில் தபால் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (வயது 52) அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மகன்கள் பிரதீப் (வயது 25), பிரவீன் (வயது 22) ஆகியோர் உடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் வீட்டிலிருந்து புகை வந்துகொண்டிருந்த காரணத்தால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூடியுள்ளனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது அவரது வீட்டினுல் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

உள்ளே புகுந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சடலமாக கிடந்த ராஜன் உடலை கைப்பற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் இருந்த அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் பிரதீப், பிரவீன் ஆகியோரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மின்கசிவினால்வீட்டுனுல் விபத்தி ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் தீ விபத்துக்கான காரணமா என்பதுகுறித்து உடுமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.