‘கண்டா வரச் சொல்லுங்க’… திமுக எம்பிக்களுக்கு எதிராக சுவரொட்டிகள்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியதால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
27 February 2024, 2:31 pm

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க என்ற வாசகங்களுடன் முக்கிய சாலைகளில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு நிலவியது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த வேலுச்சாமி. தற்போது வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்த நிலையில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரை ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற வாசகத்துடன் முக்கிய சாலைகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய சாலையான பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலை, பழனி சாலை, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், RM காலனி சாலை உள்ளிட்ட அதிக போக்குவரத்து மிகுந்த பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ‘பாராளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க… எங்கள் தொகுதி எம்பியை காணவில்லை,” என போஸ்டர் ஒட்டியதால் தற்போது பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என தெரியப்படுத்தாமல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் என்று மட்டும் ஒட்டி உள்ளனர்.

இதேபோல, திருச்செங்கோட்டில் நகரின் முக்கிய பகுதிகளில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டால் வரச் சொல்லுங்க என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நபொதுமக்கள் என்கிற பெயரில் அச்சகத்தின் பெயரும் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்து பொதுமக்களிடையே பரபரப்பாக பேசபட்டு வருகிறது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!