அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு… நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 2:14 pm

அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு… நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?