அரசுப் பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி பயங்கர விபத்து ; மாணவர்கள் படுகாயம் ; ஒசூரில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 2:02 pm
Quick Share

ஒசூர் அருகே அரசு பேருந்து, தனியார் பள்ளி பேருந்து நேருக்குநேர் மோதிய விபத்தில் மாணவர்கள் உட்பட 10க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எலுவப்பள்ளி என்னுமிடத்தில் 20க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் ஒசூர் நோக்கி வந்த அரசு பேருந்தும், ஒசூரிலிருந்து பாகலூர் நோக்கி சென்ற விஜய் வித்யாசரமம் என்னும் சிபிஎஸ்இ தனியார் பள்ளி பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்தின் டயர் வெடித்ததே சரியாக வந்த பள்ளி பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளனதாக கூறப்படும் நிலையில், பள்ளி பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநர், 2 பயணிகள் மற்றும் 5க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்களை தனியார் மருத்துவமனைக்கும், பிறரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.

பின்னர், தனியார் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த மாணவர்களை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நலம் விசாரித்தார்.

ஒசூர் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் ஓட்டுநர், நடத்துநர், சிகிச்சை பெற்று வரும் நிலையில் 60 வயது மூதாட்டி கௌரம்மா மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 503

    0

    0