பொங்கலுக்கு புதுப்பானை, அடுப்பு வழங்க கோரிக்கை : பானையுடன் வந்த மண்பாண்ட தொழிலாளர்கள்!!

Author: Udayachandran
12 October 2020, 11:22 am
Cbe Protest- Updatenews360
Quick Share

கோவை : ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தினத்தில் ஒரு புதிய மண் பானை, மற்றும் மண் அடுப்பை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் பானையுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருதாசலம் கூறியதாவது:

எங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது.பொங்கல் திருநாளில் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஒரு வேளை உணவுக்கு கூட மக்கள் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், நடப்பாண்டு பொங்கல் பரிசுப்பொருட்களுடன், புதுப்பானையும், புது அடுப்பும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

கோவையில் 10 ஆயிரம் பேர் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.மேலும், தற்போது நலவாரியத்தில் ரூ.2 ஆயிரம் என்று வழங்கப்படும் உதவித் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் மற்றும் அரிசி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 47

0

0