பிரசவிக்க முடியாமல் வயிற்றில் சிசுவோடு இறந்த காட்டெருமை!!

23 August 2020, 10:37 am
Pregnant Bison Dead - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே கருவுற்றிருந்த பெண் காட்டெருமை வயிற்றில் சிசுவுடன் உயிரிழந்தது.

கோவை காரமடை வனச்சரகம், காரமடை பிரிவு, குண்டூர் சுற்றுக்குட்பட்ட அத்திக்கடவு சராகப்பகுதியில் நேற்று காலை 10:30 மணி அளவில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இறந்த நிலையில் பெண் காட்டு மாடு கீழே விழுந்து கிடந்த உள்ளது.

அங்கு சென்று பார்த்தபோது 6 வயது மதிக்கத்தக்க காட்டு மாடு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளியங்காடு அரசு உதவி கால்நடை மருத்துவர் ஹேமச்சந்திரன் அவர்களால் பகல் சுமார் 1.30 மணியளவில் வனசரக அலுவலர், காரமடை பிரிவு வனவர், சுற்று பணியாளர்கள், கூடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தினேஷ், ஜெகதீஷ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உடற் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடற்கூறாய்வில் இறந்த பெண் காட்டு மாடின் வயிற்றில் ஆண் சிசு இருந்ததும், உள் வயிற்றில் இருந்த இரத்தக்கசிவு மற்றும் சிசுவின் நிலையை கொண்டு கன்று ஈனும் நிலையில் ஏற்பட்ட இயலாமையால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். பின்னர் வனப்பகுதிக்குள் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

Views: - 1

0

0