கர்ப்பமான சிறுமி… DNA சோதனையில் சிக்கிய பெரியப்பா : அதிர்ச்சி சம்பவம்.. நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 11:53 am
Child Rape 1 - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 16.11.2018 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது தான் அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தாத்தா முறை கொண்ட நாகன் வயது 69 என்பவரும், சொந்த பெரியப்பா ரங்கன் வயது 67 என்பவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகன் மற்றும் ரங்கன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் காவல்துறையினர் செய்த டிஎன்ஏ சோதனையில் சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரியப்பா ரங்கன் காரணம் என்பது தெரிய வந்தது.

இன்று இந்த வழக்கில் மகிலா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய சொந்த பெரியப்பா ரங்கன் வயது 67 என்பவருக்கு ஆயுள் தண்டனை இரண்டு வருட கடும் காவல் சிறை தண்டனை 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல் சிறுமையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாத்தா முறை கொண்ட நாகன் வயது 69 என்பவருக்கும் ஆயுள் தண்டனை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Views: - 127

0

0