தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் : முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று வருகை தருவதாக தகவல்!!

22 July 2021, 2:10 pm
Ramnath Kovinth -Updatenews360
Quick Share

ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்தவும், சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கவும், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 90

0

0