ஒரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வு…மறுபக்கம் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு: கலக்கத்தில் பொதுமக்கள்…!!

5 February 2021, 8:53 am
cylinder - updatenews360
Quick Share

சென்னை: பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து சென்னையில் ஒரு லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 29 காசுகள் உயர்ந்து 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து 735 ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்கா டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்திற்கு ஒரு முறை முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பு மாதம் முதல் தேதியில் வீட்டு சிலிண்டர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை சென்னையில் ரூ.91 அதிகரித்து ரூ.1,649 ஆக நிர்ணயிக்கப்பட்டது. வீட்டு சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் ரூ.710க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் ரூ.735க்கு வினியோகிக்கப்பட்டது. டெல்லி, மும்பையில் ரூ.719, கொல்கத்தாவில் ரூ.745.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. டெல்லி, மும்பையில் ரூ.719, கொல்கத்தாவில் ரூ.745.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் தான் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. வரும் மாதங்களிலும் விலை ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் இருந்து மானியமாக ரூ.24 மட்டுமே வந்து உள்ளது.

ஒரு சிலருக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மானியமே வரவில்லை என்ற நிலையும் இருந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கில் மானியம் முறையாக செலுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Views: - 18

0

0