‘பஸ்ஸுக்கு உள்ள இடமில்ல… மேல ஏறு.. மேல ஏறு’… பள்ளி மாணவர்களின் உயிரில் விளையாடும் தனியார் பேருந்து : அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 12:37 pm

ராமநாதபுரம் : கமுதியில் போக்குவரத்து விதிகளை மீறி, ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறி, தொடர்ந்து ஆபத்தான முறையில், பள்ளி மாணவ, மாணவிகளை, அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்லும் நிலை தொடர்கதையாக உள்ளது.

இவற்றை கட்டுப்படுத்த போக்குவரத்து மோட்டார் வாகன அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் ஆபத்தான பயணத்தை தொடர்ந்து நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார் கண்டு கொள்ளாதால், மாணவர்கள் அரசு, தனியார் பேருந்துகளின் மேற்கூரைகளிலும், சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஏறிச்சென்று ஆபத்தான பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவ, மாணவிகளின் நலனை கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!