முருக பக்தர்கள் கவனத்திற்கு..!! பழனி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடக்கம்
Author: Babu Lakshmanan18 ஜனவரி 2023, 11:53 காலை
திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது ஜனவரி 27ஆம் தேதி காலை 8 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தை காண மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படும பக்தர்கள் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் மலை கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2000 பேரும் படிவழிப்பாதை வழியாக 4ஆயிரம் பேர் என மொத்தம் 6ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்யும் முறையை அறிவித்தது கோவில் நிர்வாகம். அதாவது, குடமுழுவுக்கு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், திருக்கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் வலைதலமான www.hrce.tn.gov.in ஆகியவற்றின் மூலம் இன்று முதல் 20.01.2023 முடிய கட்டணமில்லா முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் முன்பதிவு செய்ய,
நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (PAN CARD)
வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
பாஸ்போர்ட் (Passport)
நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு (Bank Pass Book)
ஓட்டுநர் உரிமம் (Driving License)
குடும்ப அட்டை(Ration Card)
தேசிய அடையாள அட்டை (Aadhaar Card)
ஆகிய சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து தங்களது கைப்பேசி எண்ணுடன் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail Id) விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
0
0