புதுச்சேரியில் தனியார் பேருந்து சேவை தொடக்கம் : முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு!!

22 October 2020, 11:52 am
Pondy Private Bus - Updatenews360
Quick Share

புதுச்சேரி : கொரோனா ஊரடங்கிற்கு பின்பு இன்று முதல் மீண்டும் தனியார் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா ஊடரங்கு தளர்வுக்கு பின்னர் பேருந்துகளை இயக்க மாநில அரசு உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் அரசு உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஊடரங்கு காலத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்ததால் 6 மாதத்திற்கான சாலை வரியை ரத்து செய்தால் மட்டுமே போருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து தனியார் பேருந்துகளை அதன் உரிமையாளர்கள் இயக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் பேருந்து உரிமையாளர்களுடன் முதலமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் 6மாதத்திற்கான சாலை வரியை ரத்து செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் தனியார் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

Views: - 31

0

0