திருவண்ணாமலை தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்கு தடை…!!

27 November 2020, 7:04 pm
tvmalai temple - updatenews360
Quick Share

திருவண்ணாமலையில் 29ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் 29ம் தேதி நடைபெறும் தீபத்திருவிழாவில் கலந்து கொள்ள தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவிட்டுள்ளார். 28, 29, 30ம் தேதிகளில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

tvmalai-updatenews360

பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

நவம்பர் 29ம் தேதி காலை 04.00 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழா அன்று மலை மீது பக்தர்கள் செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சாமி வீதியுலா நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0