போலி கையெழுத்து போட்டு மோசடி…ரூ.15 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு: கணவன், மனைவி கண்ணீர் மல்க புகார்..!!

Author: Rajesh
11 March 2022, 6:25 pm
Quick Share

போலி கையெழுத்திட்டு 15 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிப்பு முயற்சி செய்வதாக தம்பதியினர் கண்ணீர் மல்க காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் தன்னுடைய மனைவியுடன் காவல்துறை ஆணையரிடம் கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்தார்.தொடர்ந்து மனு அளித்தப்பின் பேசிய மணி தன்னுடன் கோவை பச்சாப்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருடன் இணைந்து கடந்த 30வருடங்களாக மோட்டார் பம்ப் செட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.

மாகலிங்கம் மற்றும் அவரது மகன் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தன்னை தொழில் நிறுவனத்திற்க்குள் விடாமல் மிரட்டி வந்ததால் ,கூட்டாக வாங்கிய சொத்தினை பிரித்து தனது பாகத்தை தர கோரி கோவை நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து சப்ளிமெண்ட் பார்ட்னர்ஜிப் பத்திரம் மற்றும் ரிட்டையர்மெண்ட் பத்திரத்தில் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு 15கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்து செய்து விட்டதாகவும்,இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Views: - 647

0

2