புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு.. தமிழக அரசை கண்டித்து கொட்டும் மழையில் குடை பிடித்து மறியல் செய்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2021, 12:39 pm
Tasmac Protest 1 -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : புதியதாக அரசு மதுபான கடை திறப்பதை கண்டித்து கிராம மக்கள் மழையில் குடைபிடித்து தமிழக அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டத்துப்பட்டி அண்ணா நகர், பெரியார் நகர் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் புதியதாக அரசு மதுபான கடை திறப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இப்பகுதி பொதுமக்கள் தங்களது பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை தேவை இல்லை, ஏற்கனவே இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தை இழந்து கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.

அரசு மதுபானக்கடை திறந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதேபோல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மதுபான பிரியர்களால் பாதிப்பும் ஏற்படுகிறது.

ஆகவே எங்களது பகுதியில் மதுபானக்கடை தேவையில்லை என கூறி மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசை கண்டித்தும் காலை 8 மணி முதல் கொட்டும் மழையில் குட்டத்துப்பட்டி, பெரியார் நகர், அண்ணா நகர் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 334

0

0