பெற்ற குழந்தையை பந்தாடிய சைக்கோ தந்தை : மனைவிக்கு BLACKMAIL கொடுக்க வசமாக சிக்கிய வடமாநில இளைஞர் மீது தாக்குதல்.. !!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 7:11 pm

வடமாநில இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் சைக்கோ மனிதனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பழநி ரோட்டில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருபவர் ஆனந்த். இவருடைய மனைவி கார்த்திகா மற்றும் அவருடைய மகள் சாய்வர்ஷா.

ஆனந்த் என்பவர் வடமாநில இளைஞர் ஒருவரை கரண்டியை எடுத்து கடுமையாக தாக்கியும் கால்களால் எத்தி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

இது குறித்து விசாரிக்கையில் கொரோனா காலகட்டத்தில் குடிபோதையில் வீட்டிற்குள் வந்த ஆனந்த் தன்னுடைய இரண்டு வயது மகளான சாய்வர்ஷாவை தூக்கி துணி துவைப்பது போல் துவைத்துள்ளார். அதனைப் பார்த்து அவரது மனைவி கார்த்திகா தடுத்தும் அவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்

இதுகுறித்து கார்த்திகா அவருடைய தந்தையான சுரேஷ்குமார்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது

தன் மனைவியை மிரட்டுவதற்காக வடமாநில இளைஞரை கடுமையாக தாக்கி அதனை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி உன்னையும் இது மாதிரி கொலை செய்து விடுவேன் வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

அங்கிருந்து தப்பி ஓடிய வட மாநில இளைஞர் இரயிலில் ஏறி தப்பிக்க சென்ற போது கரூர் ரயில்வே போலீசாரால் பிடிக்கப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு விடுதியில் பத்திரமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தன் மகளை தாக்கியதற்காக வழக்கு நடைபெற்று வாரண்ட் பிற்பிக்கப்பட்டு ஆனந்தகுமாரை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்

இவ்வாறு மது போதையில் சைக்கோ போல் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?