‘முகக்கவசம் உயிர்க்கவசம்’ என்பதை மறக்கக் கூடாது : சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்!!

14 September 2020, 1:40 pm
Quick Share

சென்னை : முகக்கவசம் உயிர்க்கவசம் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் போது, முகக்கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது. முகக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்கான விழிப்புணர்வு ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணிவது நமக்கு மட்டுல்ல, நம்மை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காகவும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கொரோனா முற்றிலுமாக விலகும் வரை நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மழைக்காலம் தொடங்கி இருப்பதால் இன்னும் கூடுதல் கவனம் அனைவரிடமும் தேவை. காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிகளவிலான பரிசோதனைகள் மேற்கொள்வதால், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிப்பதில் மக்களிடையே அலட்சியம் தெரிவது போன்று உள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமில்லை. கொரோனா கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது, என்றார்.

Views: - 0

0

0