மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து பொதுமக்கள் போராட்டம்..!!

By: Poorni
15 October 2020, 9:59 am
Quick Share

கோவை: கோவை அருகே மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்ததாக கூறி நள்ளிரவில் லாரியை மடக்கி பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கம்மாளபட்டி பகுதியில் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். மினி லாரியில் டிரைவர் உட்பட மூன்று நபர்கள் செஞ்சேரிமலையில் இருந்து கம்மாளப்பட்டி வழியாக கழிவு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்த மினி லாரியில் இருந்த கழிவுப்பொருட்கள் மிகுந்த துர்நாற்றம் வீசி கொண்டு சென்றுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள பொதுமக்கள் அந்த லாரியை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரிக்கும்போது டிரைவரை தவிர மற்ற மூன்று நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த லாரிகளை சிறைபிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக கூறி யுள்ளனர்.

Views: - 36

0

0