அதிகரிக்கும் கொரோனா… உயிரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி… தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் பொதுமக்கள்…!!

9 April 2021, 3:36 pm
Corona vaccine - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரானா தடுப்பூசி போடவும், பிசிஆர் பரிசோதனை செய்யவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் முன்பை போல மீண்டும் வேகமெடுத்துள்ளது. தற்போது 4,200க்கும் மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அதேவேளையில், தகுதியுடையவர்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்திருந்தது. தற்போது வேகமாக கொரானா தொற்று பரவி வருவதாலும், சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் வரலாம் என வரும் செய்திகளாலும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சிக்கு சொந்தமான காரனேசன் மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்து கொள்ளவும், தடுப்பூசி போட்டு கொள்வதற்கும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

நேற்று வரை நகராட்சி காரனேசன் மருத்துவமனையில் 8281 பேர் கொரானா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் 250 நபர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று கொரோனா பரிசோதனைக்காக மருத்துவர் வராததால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்தனர்.

இதேபோல, நாமக்கல் மாட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமணை மற்றும் ஆரம்பசுகாதார நிலையம்,அம்மா மினிகிளினிக் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

இது குறித்து மருத்துவ அலுவலர் செல்வியிடம் கேட்டபோது, “தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மேலும், அதிக ஊழியர்கள் பணிபுரியும் இடங்களான நூர்ப்பாளை, விசைதறி கூடம். உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடப்படுகிறது,” தெரிவித்தார்.

Views: - 36

0

0