புதுச்சேரி பாஜக எம்எல்ஏ திடீர் மரணம் : முதலமைச்சர் நாராயணசாமி நேரில் அஞ்சலி!!

17 January 2021, 1:10 pm
Pondy Bjp Mla dead -Updatenews360
Quick Share

புதுச்சேரி : பாரதிய ஜனதா கட்சியின் நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சங்கர்(வயது 70) இன்று காலை அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலர் முனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். சங்கரின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Views: - 11

0

0