‘லேட்டா வந்தா‘ கடும் நடவடிக்கை : தலைமைச் செயலக ஊழியர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!!

9 September 2020, 3:22 pm
Pondy CM Warn - updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் தாமதமாக பணிக்கு வரும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்த பிறகு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு 4ம் கட்ட தளர்வில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து அரசு துறை அலுவலங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என்றும் ஊழியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலத்திற்கும் ஊழியர்கள் முழுமையாக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது எனவும், அதனடிப்படையில் இன்று தலைமைச்செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்து ஆய்வு செய்ததாகவும் அப்போது 24 துறை செயலர்களில் 5 செயலர்கள் பணிக்கு வரவில்லை என்றும், ஊழியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தாகவும் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, முழுமையாக 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதமாக பல்வேறு மக்கள் பணிகள் தேங்கியுள்ளதால் அனைத்து பணியாளர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் இதனை தலைமைச் செயலர் கண்காணிக்க வேண்டும் என அவரை சந்தித்து கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 6

0

0