புதுச்சேரி முழு ஊரடங்கு : விதி மீறிய வாகனங்கள் பறிமுதல்!!

18 August 2020, 1:15 pm
Pondy Lockdown- Updatenews360
Quick Share

புதுச்சேரி : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று புதுச்சேரி மாநிலத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசியமின்றி வெளியே வந்த நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 10 தினங்களாக தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகரித்து வருகின்றனர். இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் முழு ஊரடங்கை கடைபிடிக்க முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி புதுச்சேரி மாநிலத்தில் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நேற்று மாலை 7 மணிக்கு மூடப்பட்ட கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படவில்லை.

மருந்தகங்கள், பால் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது இதேபோல் அத்தியாவசியமின்றி வெளிய வந்த நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சேடி காணப்படுகிறது.

Views: - 0

0

0