எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி பெயரை வைத்து மோசடி..!!

14 February 2020, 10:36 pm
Pudukottai Arrest - updatenews360
Quick Share

புதுக்கோட்டை : கீரமங்கலத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தனது இல்லத் திருமண விழாவை யொட்டி இருசக்கர வாகனம் தருவதாக கூறி வீட்டுக்கு வீடு டோக்கன் கொடுத்து பணம் பெற்ற இருவரை கீரமங்கலம் போலிசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் அன்சாரி இல்ல திருமண விழா அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுவதாகவும் அதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தமிமுன் அன்சாரி நலத்திட்ட உதவிகளை வழங்குவதாகவும் அதை நாங்கள் பெற்றுத் தருவதற்காக கூறி பொதுமக்களிடம் இருவர் டோக்கன் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆவணம் கிராமத்தை சேர்ந்த கணி மற்றும் துலுக்கா விடுதியை சேர்ந்த சந்திரன் இருவரும் டோக்கன் வினியோகம் செய்து வந்தனர். இதில் கீரமங்கலத்தில் உள்ள சிவன் மோட்டார்ஸ் பெயரை பயன்படுத்தி உள்ளதாக அந்த கடை உரிமையாளருக்கு தகவல் கிடைத்தது.

இதனை சாமார்த்தியமாக கையாள நினைத்த அவர் டோக்கன் வழங்கும் நபர்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு எனக்கும் டோக்கன் வேண்டும் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டு அதை நம்பிய அந்த இருவரும் அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவரை வளைத்துப் பிடித்து கீரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது 50 க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி கொண்டு டோக்கன் வழங்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கீரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply