சுற்றுலா பயணிகளின் பைக்குளை திருடும் புள்ளிங்கோ : கைவரிசை காட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 11:14 am
Bike Theft Arrest -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் 6 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை திருடிய கல்லூரி மாணவர் உட்பட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த மாதம் சென்னையை சேர்ந்த கமல் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். இருசக்கர வாகனத்தை தாங்கள் தங்கியிருந்த காட்டேஜ் அருகே நிறுத்தி விட்டு தூங்கச் சென்று விட்டார்.

காலையில் எழுந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இதுபற்றி கொடைக்கானல் போலீசில் புகார் செய்திருந்தார். இதேபோல பழனியைச் சேர்ந்த சசிதரன் என்பவர் இருசக்கர வாகனமும், காரைக்குடியைச் சேர்ந்த அபிநந்தன் என்பவரது இருசக்கர வாகனம் ஆகிய வாகனங்களும் இதே போல இரவில் நிறுத்தப்பட்டது. மறுநாள் காலை காணாமல் போய் விட்டது .

இவர்களும் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தனர் .தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதை கண்டு பிடிக்க கொடைக்கானல் காவல் துறை துணை கண்காணிப் பாளர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையில் போலீசார் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியை முகமது காலித் (வயது 21), நிவாஸ் (வயது 21) ஆகிய இருவரும் விலை உயர்ந்த கேடிஎம் போன்ற இரு சக்கர வாகனங்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, முகமது காலித் மற்றும் முகமது நிவாஸ் ஆகிய இருவரும் சின்னம்மா மற்றும் பெரியம்மா மகன்கள். இருவருக்கும் ஒரே வயது. முகமது காலித் கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார்.

கொடைக்கானல் வரும் பொழுதெல்லாம் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் பற்றி முகமது நிவாசுக்கு தகவல் கொடுப்பார். முகமது நிவாஸ் இரவு நேரங்களில் தனியார் காட்டேஜ்களில் நிறுத்தப்பட்டுள்ள விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி திருச்சிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சென்று இந்த வாகனங்களை விற்றுள்ளனர். முகமது நிவாஸ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது செண்பகனூர் அருகே வாகன சோதனையில் இருவரும் சிக்கினர்.

இவர்களை விசாரித்ததில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்ததில் ,திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை இவர்கள் திருடி விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு மாவட்டங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 151

0

0