தமிழக உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாப் தமிழர் : கோவை மாநகராட்சியில் கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 8:15 pm

கோவை மாநகராட்சி 71வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட பஞ்சாப் தமிழர் டோனி சிங் மனு தாக்கல் செய்தார்.

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் 100 பதவிகள் உள்பட மொத்தம் 811 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று கடைசி நாட்கள் என்பதால் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என காலை முதலே வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 60வருடமாக கோவையில் வசித்து வரும் பஞ்சாப் தமிழர் டோனி சிங் என்பவர் கோவை மாநகராட்சி ஆர். எஸ். புரம் பகுதியில் சுயேட்சையாக 71வது வார்டில் போட்டியிடுவதற்கு மேற்கு மண்டல தேர்தல் அலுவலகத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சேவைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!