கோவை 71வது வார்டில் சுயேட்சையாக களம்காணும் ‘பஞ்சாப் தமிழர்’: ஆதரவாக வீடியோ வெளியிட்ட நடிகர்கள்..!!

Author: Rajesh
9 February 2022, 9:34 am

கோவை மாநகராட்சி 71 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு முன்னனி கட்சியினருடன் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.

அந்த வகையில் 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் 71 வது வார்டு பகுதியான ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை உள்ளாட்சி தேர்தல் களத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்பவர் களமிறங்கி இருப்பது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவர் தனது பேட்டியில் கூறுகையில்,பல்வேறு சமுதாய மக்களும் வசித்து வரும் ஆர்.எஸ்.புரம் பகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதில் தாம் பெருமை படுவதாக கூறியுள்ளார்.

உருவத்தில் தாம் பஞ்சாபியாக இருந்தாலும் தமிழன் என தம்மை பெருமையாக கூறினார்.தொடர்ந்து அவர் 71 வது வார்டில் போட்டியிடும் தமக்கு பெட்ரோமாக்ஸ் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தம்மை கோவை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என உறுதியோடு கூறினார்.

இதனிடையே தேர்தலில் போட்டியிடும் ஆனந்த் சிங்கிற்கு ஆதரவாக நடிகர்கள் பாக்கியராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். நடிகர் பாக்கியராஜ் எனது பள்ளி நண்பர். நிழல்கள் ரவி எனது கல்லூரி நண்பர். இருவரும் எனக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?