பெட்ரோல் போட தாமதமானதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் : தடுக்க வந்த காவலரையும் பந்தாடிய போதை ஆசாமிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2022, 1:08 pm
Petrol Bunk Fight -Updatenews360
Quick Share

விழுப்புரம் : பெட்ரோல் போட தாமதம் ஆனதால் பெட்ரோல் பங்க் ஊழியர்களையும் தடுக்க வந்த போலீசையும் தாக்கிய 4 போதை ஆசாமிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள கண்டாச்சிபுரம் கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.
இதில் 5 ஊழியர்களுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் கண்டாச்சிபுரம் மடவிளாகம் பகுதியை சேர்ந்த சக்தி(வயது 25), சதிஷ்(வயது 24), மணிகண்டன்(வயது 24), மகேந்திரன்(வயது 24), ஆகிய 4 பேர் ஆட்டோவில் வந்து இறங்கி வாட்டர் கேனில் பெட்ரோல் போட வந்துள்ளனர்.

அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக பெட்ரோல் போட்டுகொண்டு வந்துள்ளனர். இதில் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், பெட்ரோல் பங்க் ஊழியர்களை அசிங்கமான வார்த்தைகளில் பேசி, பெட்ரோல் பங்க் ஊழியரான கண்டாச்சிபுரம் அடுத்த சத்தியகண்டனூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்பவரை கடுமையாக தாக்கினர்.

அப்போது அந்த வழியே வந்த கண்டாச்சிபுரம் காவலர் ஒருவர் தடுக்க சென்ற போது காவலரையும் தாக்கினர். இதனை தொடர்ந்து தகவலறிந்த வந்த கண்டாச்சிபுரம் போலிசார் போதையில் ரகளையில் ஈடுபட்ட 4 போதை ஆசாமிகளை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அனைத்தும், அந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

Views: - 222

0

0