சாக்கடையில் தவறி விழுந்த நாய்க்குட்டிகள் : கொட்டும் மழையிலும் கரம் நீட்டிய தீயணைப்பு வீரர்!!

15 May 2021, 4:30 pm
Puppies Rescue - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் சாக்கடையில் தவறி விழுந்த 2 நாய்க்குட்டிகளை கொட்டும் மழையில் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கேகே நகர் பகுதி அருகே இருந்த கழிவுநீர் சாக்கடையில் இன்று காலை இரண்டு நாய்க் குட்டிகள் தவறிக் கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அவர்கள் நாய்க்குட்டிகள் உயிருக்கு போராடுவதை பார்த்தவுடன் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான குழுவினர் ஏட்டையா சந்திரன், ஃபயர் மேன் கேசவமூர்த்தி, இஸ்மாயில், முகமதலி ஜுபைர், வெள்ளதுரை, ஜோதி கண்ணன் ஆகியோர் கொட்டித் தீர்த்த கன மழையிலும் சென்று நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டெடுத்தனர்.

மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்களின் இந்த மனித நேயமிக்க செயலை மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். மழை வெள்ளப் பேரிடர் காலங்களில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளுக்கு 24 மணி நேரமும் தயாராக உள்ளதாக நிலைய அலுவலர் பாலசுந்தரம் கூறினார்.

Views: - 99

0

0