புரட்டாசி மாத சனிக்கிழமை : கூட்டமின்றி கலையிழந்த காரமடை கோவில்!!

19 September 2020, 11:04 am
Karamadai Kovil - updatenews360
Quick Share

கோவை : காரமடை அரங்கநாதர் கோவில் புராட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா பக்தர்கள் கூட்டம் இன்றி கலையிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையான வைணவ திருத்தலமாகும். இங்கு புரட்டாசி மாத வழிபாடு தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் தாசர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கி வழிபடுவது வழக்கம்.

அதற்காக புரட்டாசி மாதம் மூன்று சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அதிக அளவில் கூடி ரங்க நாதரை வழிபட்டு தாசர்களுக்கு உணவு பொருட்களை படையலிட்டு வழிபடுவதற்காக கோவை திருப்பூர் நீலகிரி என மூன்று மாவட்ட மக்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வழிபடுவது வழக்கம்.

ஆனால் தற்போது கொரானோ அச்சம் காரணமாக காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு பெரிய அளவில் பக்தர்கள் யாரும் வருகை தராததால் பக்தர்கள் கூட்டம் பெருமளவு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் சார்பில்
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யபட்ட நிலையிலும் பக்தர்கள் கூட்டம் இன்றி கலையிழந்தது

மேலும் கொரானோ அச்சம் காரணமாக தாசர்கள் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படாமல் சாலையிலேயே அமர வைக்கப்பட்டனர், பொதுமக்கள் அரிசி பருப்பு காய்கறிகளை கொண்டு படையலிட்டு வழிபாடு நடத்தி சென்றனர்.

Views: - 11

0

0