இதுக்கு ஒரு END CARD போடுங்கப்பா… பொன்னேரியில் ரயில் தடம் புரண்டு விபத்து.. நெட்டிசன்கள் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 11:46 am

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின் கம்பி மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் பராமரிப்பு ரயில் சென்னை பணிமனையில் இருந்து சென்றது.

பொன்னேரி ரயில் நிலையம் அருகே செல்லும் போது அதன் சக்கரம் கீழே இறங்கியதில் தண்டவாளம் சேதமானது. உடனடியாக அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு ரயில் சக்கரத்தை மேலே தூக்கி தண்டவாளத்தை சரி செய்தனர்.

பின்னர் மீண்டும் வழக்கம்போல் அவ்வழியாக மின்சார ரயில்கள் இயங்கின. இதனால் சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் சேவை ஒருமணிநேரம் பாதிப்பு ஏற்பட்டது.

லூப்லைனில் பராமரிப்பு ரயில் தடம் புரண்டால் பெரிய அளவில் ரயில் சேவையில் பாதிப்புகள் ஏற்படவில்லை. தடம் புரண்ட பகுதியில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் ரயில் விபத்துகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் தொடர்ந்து சரக்கு ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது நெட்டிசன்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!