துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்கு கல்தா… புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 11:09 am

புழல் மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அஜய்பாபு. அவரது மகள் ஜெயந்தி (வயது 32). இவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செம்மஞ்சேரி பகுதியில் குடிப்பெயர்ந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் துரைப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஐந்து மணியளவில் புழல் சிறை வளாகத்தில் பொதுமக்கள் கைதிகளை பார்க்கச் செல்லும் அறை வழியாக ஜெயந்தி அங்கிருந்து வெளியே தப்பி ஓடி உள்ளார்.

சிறை வளாகத்தில் தினமும் காலை, மாலை ஆட்கள் கணக்கெடுக்கும் பணி வழக்கமாக கொண்டிருந்த வேளையில், அங்கு ஜெயந்தியை காணாத பெண் போலீசார் இது குறித்து புழல் சிறை அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சிறை அலுவலர்கள் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஜெயர்த்தியை சிறை வளாகம் முழுவதும் தேடியதில், அவர் பொதுமக்கள் மனு கொடுத்து கைதிகளை பார்க்கும் அறை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபப்பட்டதின் பேரில்
தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், பெங்களூர் பெண் கைதி ஜெயந்தி தப்பிய விவகாரத்தில் சிறை வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்ய சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கிகள் ஏந்திய போலீசார் பாதுகாப்புகள் மிகுந்த புழல் சிறையில் இருந்து பெண் சிறைவாசி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ஜெயந்தியை புழல் போலீசார் தேடி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!