கோவையில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை: படுகர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல்

23 January 2021, 8:09 pm
Quick Share

கோவை: வாங்க, ஒரு கை பாப்போம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் 3 நாட்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று கோவை வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை சித்ரா, சின்னியம்பாளையம் பகுதிகளில் பொதுமக்களிடையே ராகுல்காந்தி உரையாற்றினார். இதையடுத்து திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதிக்கு கருமத்தம்பட்டி பகுதி வழியாக ராகுல்காந்தி புறப்பட்டு சென்றார். கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது படுகர் இன மக்கள் தங்களது பராம்பாரிய உடையணிந்து, நடனமாடி வரவேற்பு அளித்தனர். இதனைப்பார்த்த ராகுல்காந்தி காரில் இருந்து இறங்கி வந்தார். படுகர் மக்கள் அளித்த அவர்களது பராம்பரிய உடையை அணிந்தபடி, அவர்களுடன் சிறிது நேரம் நடனமாடினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும் உடன் இணைந்து நடனமாடினார்.

Views: - 0

0

0