பாஜகவோட BRAND AMBASSADOR ராகுல்காந்தி தான்… கட்டாயம் தேர்தலில் போட்டியிடணும் : அண்ணாமலை அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2023, 6:15 pm
annamalai - Updatenews360
Quick Share

தூத்துக்குடியில், பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மோடி என்ற பெயர் அனைவருமே கொள்ளையர்கள் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதி அந்த பதவியில் இருக்கும் தகுதியை இழக்கிறார். நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்தியாவின் உச்சபட்ச காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அரசை எதிர்த்து கார்ட்டூன் மீம் போடுபவர் அனைவருமே நள்ளிரவு இரண்டு மணிக்கு கைது செய்யும் போது சட்டம் பொருந்தும் என்றால் ராகுல் காந்திக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

ராகுல் காந்தி இந்த விவகாரத்தை அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். சௌகித்தார் என்ற விவகாரம் தொடர்பாக பேசும்போது நீதிமன்றம் ராகுல்காந்திக்கு ஏற்கனவே எச்சரிக்கை கொடுத்தது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சாதாரண மனிதனுக்கும் ராகுல் காந்திக்கும் சட்டம் பொருந்தும் என்பதே சரி. பாராளுமன்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்த அவர், சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் இதற்கு முன் எடுத்த நடவடிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு பல வழிகள் உள்ளது. சபாநாயகர் எடுத்த நடவடிக்கையில் எந்தவித தவறும் இல்லை.

ராகுல் காந்தி கட்டாயம் தேர்தலில் போட்டியிடனும் பாஜகவின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல் காந்தி தான், ராகுல் காந்தி அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பாரத் ஜோடோ யாத்திரைக்கி பின்பு பல குழப்பத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி பேசிக் கொண்டே இருந்தால் தான் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கும் அமிர்தமாக இருக்கும். 2024ல் புது ஸ்லோகனோடு ராகுல் காந்தி வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம். ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டப்படியானது என்று கூறினார்.

Views: - 79

0

0