பிரபல திரையரங்கு உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு : வரி ஏய்ப்பு செய்ததாக புகார்… வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 7:40 pm
Theatre owner Raid - Updatenews360
Quick Share

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பெரியக்கோவில் மேம்பாலம் அருகில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உள்ளது. இதன் உரிமையாளர் குமார். இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது. இவர் பல்வேறு தொழில் நடத்தி வருகிறார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும், வருமானவரி, ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து 16 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் நான்கு பிரிவாக பிரிந்து குமார் வீடு அவரது தொழில் நிறுவனம், திரையரங்கம் ஆகிய நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Views: - 480

0

0