ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கு… பயமாதான் இருக்கு : மலை மீது உலா வந்த யானை…. ஆர்வமாக பார்த்த மக்கள்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 8:39 pm
Elephant - Updatenews360
Quick Share

கோவை கணுவாயை அடுத்த நர்சரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் ஒற்றை காட்டுயானை சென்றுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் மலையின் பாதி அளவிற்கு குடியிருப்புகள் இருப்பதால் யானையை விரட்ட வேண்டும் எனவும் மீண்டும் யானை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்ட நாட்கள் கழித்து அப்பகுதியில் மலை சென்ற யானை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

அதே சமயம் அப்பகுதி மக்கள் மீண்டும் யானை வர துவங்கியுள்ளது அச்சமடைய செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Views: - 138

0

0