டாஸ்மாக் பார் போல மாறிய ரயில் நிலையம் : பட்டப்பகலில் சாராயம் குடிக்கும் குடிமகன்கள்.. ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2023, 1:26 pm
Tasmac Bar - Updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பத்தில் கடந்த வாரம் விஷசாராயம் அருந்தி 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தமிழகம் முழுதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சாராய விற்பனை மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையிலும் நேற்று மாலை விழுப்புரத்தின் மையப்பகுதியான விழுப்புரம் ரயில் சந்திப்பு வெளிய அமர்ந்து இருவர் சாவகாசமாக சாராயம் குடிக்கும் காட்சிகள் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாராய விற்பனை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று போலீசார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Views: - 317

0

0