புரட்டி எடுக்கப் போகும் கனமழை : தமிழகத்திற்கு ‘ஆரஞ்சு அலர்ட்‘

20 September 2020, 12:17 pm
RAin Alert - Updatenews360
Quick Share

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகம், கேரள மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், வங்கக் கடலின் மேலே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் மேற்குவங்கத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையொட்டி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதயால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0