“தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

21 August 2020, 3:18 pm
Quick Share

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தர்மபுரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 23,24, 25 தேதிகளில் தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் .

அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் டேனிஷ்பேட்டை, நீலகிரி கோத்தகிரி தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை…,

ஆகஸ்ட் 21 வடக்கு ஆந்திரா, ஓடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 21 முதல் 25 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 22, 23 மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 21 முதல் 24 வரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு..,

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 22.08.2020 இரவு 23.30 மணி வரை உயர் கடல் அலை 2.5 முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

Views: - 36

0

0