முத்திரையர் சமுதாயத்தை புறக்கணிக்கும் அதிமுக: ராஜமாணிக்கம் குற்றச்சாட்டு

Author: Udayaraman
10 October 2020, 10:33 pm
Quick Share

வேலூர்: முத்தரையர் சங்கம் திமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக உரிய மரியாதை தரவில்லை முத்திரையர் சமுதாயத்தை புறக்கணிப்பதாகவும் முத்தரையர் சங்க மாநிலத் தலைவரும், நமது மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான ராஜமாணிக்கம் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் முத்தரையர் சமுதாயத்தின் தலைவரும் நமது மக்கள் கட்சியின் நிறுவன தலைவருமான ராஜமாணிக்கம் திமுக பொதுசெயலாளர் துரைமுருகனை அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் இளைஞரணி செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் முத்தரையர் சமுதாயத்தின் தலைவரான ராஜமாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது முத்தரையர் சமுதாயத்தை மதித்தார் மிகவும் கௌரவமாக நடத்தினார். ஆனால் தற்போது அதிமுகவிற்கு இரட்டைதலைவர்களும் முத்தரையர் சமுதாயத்தை மதிக்கவில்லை.

அதிமுகவில் தற்போது அமைக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட உயர்மட்ட குழுவிலும் முத்தரையர் சமுதாயத்தில் ஒருவர் கூட இடம்பெறவில்லை. எங்களை அதிமுக தொடர்ந்து புறக்கணித்து வருகிறது எங்களின் கோரிக்கைகளை கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் எடுத்துரைத்தோம். ஆனால் அவைகள் நிறைவேற்றபடவில்லை கண்டுகொள்ளவுமில்லை.

இதனால் தாங்கள் அதிர்ப்தியில் உள்ளோம். தாங்கள் வருகின்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்றார். தற்போது இவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க பொதுசெயலாளர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எனவே இவர்கள் திமுக கூட்டணியில் சேர்வதற்காக பணிகளை துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 55

0

0