மக்களுக்கு பயந்து இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பியோடும் நிலை திமுகவுக்கும் வரும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 5:22 pm
Edappadi Palanisamy - Updatenews360
Quick Share

தாராபுரம் பகுதிக்கு வருகை தந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசும் போது, திமுக தலைவன் ஒருவர்தான், ஆனால் மேடையில் முன்பு இருந்த தொண்டர்களை கைகாட்டி அதிமுகவிற்கு எல்லோரும் தலைவர்களை என தொண்டர் முதல் நிர்வாகி வரை அனைவரும் தலைவர் எனக் கூறினார்.

உங்கப்பன் கருணாநிதி அவராலேயே அதிமுகவை அளிக்க முடியல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இறந்த பின்பு அதிமுகவை அளிக்க நினைத்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வந்த பிறகு அதிமுகவை பல மடங்கு உயர்த்தி இந்தியாவில் மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக காட்டினார்.

இலங்கையில் நடைபெற்ற குடும்ப ஆட்சி அதிபராக இருக்கும் போது இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலைமை, தமிழ்நாட்டில் உங்களுக்கும் வரும் என கூறினார். அதே மக்கள் புரட்சி தமிழகத்திலும் வெடிக்கும் என கூறினார்.

காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியுமோ அது போல் அதிமுகவின் வளர்ச்சி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கடந்த ஒன்னு நாலு 2021 முதல் தமிழகத்தில் எங்களது ஆட்சியில் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழங்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது கரண்ட் எப்ப வரும் எப்ப போகும் மக்களால் சொல்ல முடியவில்லை. வீட்டு வரி ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், 2000 ரூபாயாக இருந்த வீட்டு வரி 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்துகிறார்.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதையும் பெண்களும் நம்பி ஓட்டு போட்டு இன்று அந்த பணம் என்னானது என கேள்வி கேட்கும்போது அந்தப் பணம் உரிமை பணம், ஊக்கப்பணம், கொடுப்பதற்கு ஆய்வு செய்து வருகிறோம் என பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார்.

ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய் தள்ளுபடி தருகிறேன் என கூறி பொய்யான வாக்குறுதியில அழித்து ஆட்சி கட்டில் அமர்ந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 567

0

0