மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… இளைஞர் வெட்டிக்கொலை; 5 பேரை கைது செய்தது போலீஸ்..!

Author: Babu Lakshmanan
8 August 2022, 5:31 pm
Quick Share

திருவள்ளூர் சோழவரம் அருகே எரிகரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரி தண்ணீர் செல்லும் கரையை ஒட்டிய பகுதியில்
நண்பர்களுடன் மது அருந்திய போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆட்டந்தாங்கள் ஔவையார் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்கிற சுப்பிரமணி என்பவரை அரிவாளால் வெட்டி விட்டு, அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ரமேஷை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தனர்.

ரமேஷ் கொலை வழக்கில் அரவிந்த் மற்றும் வினோத் ஆகிய இருவரும் ரமேஷை கத்தி எடுத்து வெட்டியதாகவும், உடன் இருந்தவர்கள் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், அரவிந்த், வினோத், வீரராகவன், விஜய், வெங்கடேசன் உள்ளிட்ட ஐந்து பேரை சோழவரம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்ட ஆத்திரத்தில் திட்டமிட்டு வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்தனர் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 148

0

0