அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் அண்ணாத்த : காரில் இருந்தபடி ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகம்!!
27 December 2020, 5:18 pmகர்நாடகா : ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படிப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் கலந்து கொண்டார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய ரஜினி தனியார் ஹோட்டலில் தங்கினார். இதையடுத்து மறுநாள் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்வோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா அறிகுறி இல்லை என்று அறிக்கை வெளியிட்டனர். மேலும் உயர்தரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மேலும் அவர் ஒரு வார காலத்திற்கு ஓய்வெடுக்க அறிவுறுத்திய மருத்துவர்கள், மன அழுத்தமின்றி இலகுவான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
கொரோனா தொற்றக் கூடிய சூழல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கிய மருத்துவர்கள் இயல்பான எளிய வேலைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆன நடிகர் ரஜினி காரில் இருந்து கையசைத்தப்படி சென்றார்.
மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி இருப்பதால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தங்கில் சில நாட்கள் ரஜினி ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கட்சி அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
0
0