“எம்.ஜி.ஆர் போல ஆட்சி“ : ரஜினியை மீண்டும் சீண்டிய ரசிகர்கள்!!

15 September 2020, 10:40 am
Rajini Fans 1- updatenews360
Quick Share

மதுரை : போஸ்டர் ஒட்ட வேண்டாம் என ரஜினி கட்டளையிட்டும் தொடர்ந்து அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே, நான் அரசியலுக்கு வருவேன் எனவும், மேலும் அரசியல் மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தமிழக அரசியலில் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குவார், தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில் பாஜகவிற்கு ரஜினி ஆதரவளிப்பார் எனவும், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் எனவும் பாஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர்.

ஆனால் ரஜினியை அரசியலில் மையப்படுத்தும் விதமாக நல்லவர் பின்னாலே நாடே வரும் தன்னாலே எனவும், எம்.ஜி.ஆர் போல இல்லையென்றாலும், எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன் எனவும் மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், தலைமையில் மறு உத்தரவு வரும் வரை போஸ்டர் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டும் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருவது ரஜினியை சீண்டிப் பார்ப்பது போல உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.