மகத்துவம்.. மாற்றம்…ரஜினி ! மீண்டும் சீண்டிய ரசிகர்களால் பரபரப்பு…!!!

18 October 2020, 5:26 pm
Quick Share

காஞ்சிபுரம் “மகத்துவத்திற்கான நேரம்… மாற்றத்திற்கான ரஜினி” எனும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் காஞ்சிபுரத்தில் பல பகுதிகளில் ஓட்டபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் கட்சியிலும் சூப்பர் ஸ்டாராக தடம் பதித்திட வேண்டுமன அவரது ரசிகர்கள் கடந்த சில வருடங்களாக அவரை அரசியலில் இழுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான வசனங்களுடன் கூடிய போட்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் நகரின் பல இடங்களில் ரஜனி புகைப்படத்துடன் ஆங்கில மொழியினில் ஒரு மகத்துவத்திற்கான நேரம் இதுவே எனவும் அதில் மாற்றத்திற்கானவர் ரஜனியே என்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த போஸ்டர்களில் எங்கு பிரிண்ட் செய்யப்பட்டது என்ற எந்தவிதமான தகவலும் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி அரசியலில் தடம் பதிப்பரா எனும் கேள்வியானது எழுந்துவரும் நிலையில் எவ்வித முகாந்தரமும் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள இப்போஸ்டரால் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பெரும் குழம்ப நிலையானது உருவாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் கலாச்சாரத்தால் ஏற்பட்ட பரபரப்பு போல் காஞ்சிபுரம் நகரிலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Leave a Reply