எதிர்பார்த்ததுதான், இப்ப இல்லை, எப்பவும் இல்லை : ரஜினி குறித்து கஸ்தூரி டிவிட்!!

30 December 2020, 10:52 am
Rajini Kasturi-Updatenews360
Quick Share

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் வரமாட்டேன் என அறிவித்தற்கு நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினி நாளை அரசியல் கட்சி அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் உடல்நலக்குறைவால் அரசியில் கட்சி அறிவிக்கப்படாது என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ரஜினியின் முடிவுக்கு கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, நடிகர் ரஜினியின் முடிவு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், எதிர்பார்த்தது தான் எத்தனையோ முறை நான் உட்பட பல்ர் சொன்னதுதான் எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம், வருடத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம், இப்ப இல்லை, எப்பவும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிதும் என்றும், உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என பதிவிட்டுள்ளார். மேலும் ரஜினியின் முடிவுக்கு பாராட்டுகள், அவர் பூரண நலத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Views: - 1

0

0