ரஜினிகாந்த் ‘டான்’ படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் என்ன சொன்னார் தெரியுமா.?

Author: Rajesh
19 May 2022, 4:28 pm
Quick Share

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் தனக்கு என்ன வருமோ, அதற்கு எற்ற கதாபாத்திரங்களையும், கதைக்களங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாக்டர், இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 100 வசூலித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்த வெளியான டான் திரைப்படமும், ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது.
இப்படம் இதற்கு முன் சிவகார்த்திகேயன் பட வசூல்களை காலி செய்து வருகிறது. இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகாமாக இருந்ததால், அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. அதன் காரணமாக வசூலும் நல்ல விதமாக வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில் ரஜினி டான் திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக கூறியுள்ளார். “சூப்பர் பா, நல்ல நடிப்பு, கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை” என கூறியதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Views: - 618

7

1