ராஜீவ் காந்தி பிறந்தநாள் : அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த காங்கிரசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2021, 3:00 pm
Cbe congress -Updatenews360
Quick Share

கோவை : ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் வழங்கிய காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை இன்று காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.

மேலும் ரத்ததான முகாமை துவக்கி வைத்தனர். அக்கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்கட்டமாக 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 10 பேர் ரத்ததானம் செய்தனர்.

முன்னதாக அக்கட்சியின் கோவை மாவட்ட அலுவலகமான காமராஜ் பவனில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Views: - 249

0

0