தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்? வெளியான தகவல்!!

27 January 2021, 7:54 pm
TN New Cheif sec - Updatenews360
Quick Share

சென்னை : தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தலைமை செயலாளராக சண்முகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். அவருக்கு 60 வயது எட்டியதால் கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அவருடை பணி காலத்தை 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட பின் மீண்டும் ஜனவரி 31ஆம் தேதி வரை பதவிக்காலத்தை நீட்டித்தது மத்திய அரசு.

இந்த நிலையில் மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழக அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரை தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0