மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 1:49 pm
நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 செப்டம்பர் 13ம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளராகள் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எம்.எம்.அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.
0
0